×

காவிரி ஆறு, மகாமக குளத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி 5 கோயில்களில் தீர்த்தவாரி

கும்பகோணம், மார்ச் 22: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கும்பகோணம் காவிரி ஆறு, மகாமக குளத்தில் 5 கோயில்களின் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. விழாவின் 10வது நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் சுவாமி மற்றும் அனந்த நிதியம்பிகைம்மன் சமேத கம்பட்டவிஸ்வநாதர் சுவாமிகள் தனித்தனி வாகனங்களில் வீதியுலா சென்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. கொட்டையூர் அடுத்த கோடீஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில்  தீர்த்தவாரி, காவிரி ஆற்றில் நடந்தது. இதேபோல் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏக தினவிழா நடந்தது.காலையில் தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வீதியுலா சென்று காவிரியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Kariyari River ,temples ,Mahamaga Pond ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு