×

அப்போலோ மருத்துவமனை சார்பில் சர்வதேச பெருங்குடல் சிகிச்சை கருத்தரங்கம்

சென்னை, மார்ச 22: அப்போலோ மருத்துவமனை சார்பில் 3வது சர்வதேச பெருங்குடல் சிகிச்சை கருத்தரங்கம் இன்று தொடங்குகிறது. அப்போலோ மருத்துவமனை சார்பில் 3வது சர்வதேச பெருங்குடல் சிகிச்சை கருத்தரங்கு சென்னையில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பெருங்குடல் சிகிச்சை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது. பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், கணைய புற்றுநோய் (கோலான் கேன்சர்) தற்போது உலகளவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கில் கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பாக உலகளாவிய சிகிச்சை, அதுதொடர்பான நோய்களை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதிநவீன பெருங்குடல் சிகிச்சை முறைகள் தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இதில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கின்றனர். இதனால் மூலம் பெருங்குடல் சிகிச்சை மேலும் மேம்படுத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags : colon therapy seminar ,Apollo Hospital ,
× RELATED வலது தொண்டை குருதிக்குழாயில்...