×

வாக்காளர் பட்டியலில் குளறுபடி சோழிங்கநல்லூர் தொகுதிக்கு வத்தலக்குண்டு வாக்குச் சாவடி

சென்னை, மார்ச் 22: தொகுதி மாற்றம் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததில், வெளியான வாக்காளர் பட்டியலில் கடைசி நேரத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். எபிக் எண் மூலம், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தால், அதில் கடைசி நேரத்தில் பல குளறுபடிகள் நடப்பது தெரியவந்துள்ளன.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒருவர், மடிப்பாக்கம் பகுதியில் குடியேறியதால், முகவரி மாற்றத்துக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். எபிக் எண் (RTO1471895) மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, அதில் 2 பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. பல்லாவரம்  தொகுதியில் இருந்து வாக்காளர் பெயர் நீக்கப்படவில்லை. புதிதாக மாற்றப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்குச்சாவடியின் முகவரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பள்ளியின் முகவரி இடம் பெற்றுள்ளது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags : Vathalakundu ,constituency ,Cholingankallur ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!