×

திருக்கழுகுன்றம் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியில் பராமரிக்காத குடிநீர் தொட்டியால் சுகாதார சீர்கேடு

திருக்கழுகுன்றம், மார்ச் 22: திருக்கழுகுன்றம் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்காமல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எச்சூர் ஊராட்சி பள்ளக் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார் பில், மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர்  வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் தொட்டியை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிப்பது இல்லை. இதனால், அந்த தொட்டியில் விடப்படும் தண்ணீர், அசுத்தமாக காணப்படுவதுடன், மேலும், குடிநீர்த் தொட்டியின் அடிப்பகுதியில் சேறும் சகதியுமாக உள்ளது. குடிநீர் பைப்லைன் முழுவதும் துருப்பிடித்துள்ளது. இதனால், அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தாலும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்வது இல்லை.

இதனால், சுத்தமற்ற குடிநீர் கிடைக்காமல், அசுத்தமான குடிநீரை குடித்து பல்வேறு நோய்கள் தாக்கும் நிலையில் இருக்கிறோம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் பைப்லைன் துருப்பிடித்துள்ளதால், தொட்டியை இடிந்து விழுமோ என்ற பயமும் எள்ளது. எனவே,  வரும் கோடை காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.  இதனை சரி செய்ய, மேற்கண்ட தொட்டியை சுத்தம் செய்து, குடிநீர் வினியோகம் வழக்கம்போல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...