×

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 22: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் காடையை அகற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி    திருவள்ளூர் மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் லிவிங்ஸ்டன்  தலைமையில் நேற்று   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் ரெட்டம்பேடு சாலை வழியாக தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கின்றனர். இவர்களின் சிலர், ரெட்டம்பேடு டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் கிடக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மாலை நேரங்களில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தில்  பாதியை குடிப்பதற்கே செலவழிக்கின்றனர்.

இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடை முன்பு நேற்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து  போராட்டக்காரர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ‘வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும், காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுதான் ஆர்ப்பாட்டம் நடந்த வேண்டும்’ என கூறினர்.  இதை ஏற்ற போராட்டக்காரர்கள், ‘நாங்கள் முறையாக வட்டாட்சியர் மனு கொடுக்கிறோம்’ என்று கூறி கலைந்து சென்
றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Demonstrators ,shop ,Tasmag ,gummidipoondi ,
× RELATED அடகு கடையில் கொள்ளை முயற்சி