×

சிவ- விஷ்ணு ஆலயத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலம்

திருவள்ளூர், மார்ச் 22: திருவள்ளூர் பூங்கா நகர் சிவ- விஷ்ணு ஆலயத்தில், பங்குனி உத்திரம் விழாவையொட்டி நேற்று திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.காலை 10 மணிக்கு பூங்குழலி அம்பிகை - புஷ்பவனேஸ்வரருக்கும், பத்மாவதி தாயார் - சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Tags : Shiva ,Vishnu Temple ,
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்