×

ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக தி.மு.கவினர் வாக்கு சேகரிப்பு

பள்ளிப்பட்டு, மார்ச் 22 : ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மயிலாடும்பாறை, தேவலம்பாபுரம், திருநாதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம் தலைமையில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தி.மு.க வினர் பிரசாரம் செய்தனர்.அப்போது பொதுமக்களிடம் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறினர். வாக்கு சேகரிப்பின்போது பொதுக்குழு உறுப்பினர் மா.ரகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, மாவட்ட நெசவாளரனி அமைப்பாளர் எஸ்.ஆர்.ரவி, மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.செங்குட்டுவன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிலம்பு பன்னீர்செல்வம், ஒன்றிய பிரதிநிதி பி.கே.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,vote vote ,Jagathrakshakan ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்