×

அரவக்குறிச்சியில் துணிகரம் டாஸ்மாக் கடையில் கலால் அதிகாரி என கூறி ரூ.1.14 லட்சம் கொள்ளை சிசிடிவி பதிவு மூலம் மர்ம ஆசாமிக்கு வலை

அரவக்குறிச்சி, மார்ச் 22: அரவக்குறிச்சி டாஸ்மாக் கடையில் கலால் அதிகாரி எனக்கூறி  1.14 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர் சேலம் - மதுரை தேசிய நெடுஞ் சாலையில் அரவக்குறிச்சி மரக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை எண் இயங்கி வருகிறது. குளித்தலை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் இக்கடையின் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை  கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார்.

வேகமாக கடையினுள்ளே  நுழைந்த அந்த நபர், சேல்ஸ்மேன் பாலகிருஷ்ணணிடம்  நேற்றைய சேல்ஸ் பணம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதா என அதிகாரி தோரணையில் அடுக்கடுக்காய் கேள்வி கேட்டுள்ளார். இதனால் பயந்த சேல்ஸ்மேன் முந்தைய வசூல் பணம் ரூ.1.14 லட்சத்திற்கு சலான் எழுதி வைத்திருப்பதைக் காண்பித்துள்ளார். ஏன் இதனைக் கட்டவில்லை உடனடியாக என்னுடன் ஸ்டேஷனுக்கு வா எனக்கூறி பணம் இருந்த பையை வாங்கிக் கொண்டு வேகமாக வெளியில் வந்து டூ வீலரில் ஏறி பறந்து விட்டார்.  அதன் பிறகு தான் வந்தவர் கலால் அதிகாரி இல்லை என விற்பனையாளருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை  ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியைபோலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Citizen ,CCTV ,
× RELATED தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை