×

கரூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் திருமணம் செய்த ேஜாடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கரூர், மார்ச் 22: பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த ஜோடி கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்து மனு அளித்தனர்.
அரவக்குறிச்சி தாலுகா சவுந்திராபுரம் பள்ளபட்டியில் வகிக்கும்ஆனந்த்(28). இவரது மனைவி தரணி(21) ஆகிய இருவரும் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தனர். அங்கு தரணி அளித்த கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பது: நானும், ஆனந்தும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை வட்டி தொழில் செய்து வருகிறார். அவரிடம் பல நபர்கள் வேலை செய்து வருகின்றனர். எனது கணவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்களை தீர்த்துக்கட்டும் நோக்கில் பல முயற்சிகள் செய்து வருகிறார். தஞ்சாவூர் மருததுவ கல்லூரி காவல் நிலையத்தில் கணவர் மீது பொய் புகார் கொடுத்து துன்புறுத்தி சிறையில் அடைத்தனர். நான் முதல் முறை கர்ப்பமானபோது அடித்து துன்புறுத்தி கணவரிடம் இருந்து எனனை பிரிக்க எண்ணியபோது கரு கலைந்து விட்டது.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமுற்றிருந்த நிலையில் என்னை வீட்டில் உள்ளவர்கள் கருவை கலைக்குமாறு துன்புறுத்தினர். அக்கம் பக்கத்தினர் வந்ததால் விட்டு விட்டனர். எனது தந்தை, உறவினர்கள், அவரது ஆட்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் தக்க பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : groom ,Karur SBI ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...