×

வெங்கமேடு மேம்பால இறக்க தடுப்பு சுவரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், மார்ச் 22: கரூர் வெங்கமேடு மேம்பால பகுதியின் இறக்கத்தில் இருந்து வாங்கப்பாளையம் பிரிவு வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே குறுகிய சாலையான இந்த சாலையை இரண்டாக பிரித்து தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அனைத்தும் சிரமப்பட்டுத்தான் கடந்து சென்று வருகிறது. இந்நிலையில் மேம்பாலத்தின் இறக்கத்தில் தடுப்புச் சுவர் துவங்கும் பகுதியில் ஒளிரும் தன்மை கொண்ட விளக்கு பொருத்தப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில் மேம்பால பகுதியில் இருந்து வெங்கமேடு நோக்கி செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஒளிரும் விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : bouncers ,
× RELATED சேலம் மாஜி விஐபியை வரவேற்க...