×

ராஜபாளையத்தில் குப்பை தொட்டியான ஜவஹர் மைதானம்

ராஜபாளையம், மார்ச் 21: ராஜபாளையத்தில் முக்கிய இடமான ஜவஹர் மைதானம் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள ஜவஹர் மைதானம் மிக முக்கிய இடமாக திகழ்கிறது. இங்கு நகராட்சி சார்பில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்நிலையில், இந்த மைதானத்தில், அப்பகுதி குடியிருப்புவாசிகள் குப்பைகளை கொட்டி அசுப்படுத்தி வருகின்றனர். மேலும், மைதானம் தற்போது டாக்ஸி ஸ்டாண்ட் ஆக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த பகுதியை பிரசாரம் செய்யும் இடமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஜவஹர் மைதானத்தை சுத்தப்படுத்தி, குப்பைகள் கொட்டா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jawahar Stadium ,Rajapalayam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி