×

பாராளுமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகள்

உத்தமபாளையம், மார்ச் 21: தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் களைகட்டி வரும் நிலையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் பற்றிய கணக்கெடுப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த நடக்க உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகள் தயாராகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் இதையடுத்து வாக்குப்பதிவை எந்தவிதமான பிரச்னையும் இன்றி சுமூகமான முறையில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால தேர்தலின்போது உள்கட்சி சண்டை, குடும்ப பகை, சாதிய வன்முறை, மதரீதியான பிரச்னைகள் வெடிக்கும். எனவே கடந்த காலங்களில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எந்தந்த ஊர்களில் எல்லாம் வன்முறை வெடித்தது. படுகொலைகள், கலவரங்கள், நடந்தன. உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவை பதட்டமான வாக்குசாவடிகள், மிக பதட்டமான வாக்குசாவடிகள் என பிரிக்கப்பட்டு பட்டியல் தயாராகி வருகிறது. இதன் அடிப்படையில்தான் எத்தனை போலீசாரை பாதுகாப்பிற்காக நிறுத்துவது, துப்பாக்கி ஏந்திய போலீசார் எத்தனை பேரை நிறுத்துவது, கூடுதல் போலீசார் எத்தனை பேரை பணியில் அமர்த்தலாம் உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த சட்டசபை தேர்தலில் எந்தவிதமான வன்முறையும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த கால தேர்தல்களில் நடைபெற்ற வன்முறைகள், பிரச்னைகள் அடிப்படையில் இதன் விபரங்கள் சேகரிக்கப்படும். இதன் அடிப்படையில் ஏற்கனவே திரட்டப்பட்ட தகவல்களை கொண்டே பதட்டமான மிக பதட்டமான வாக்குசாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நாளன்று பிரச்னைகள் ஏற்படாதவகையில் வாக்குப்பதிவு நடக்க பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...