×

துவரங்குறிச்சி அருகே பைக் மீது கார் மோதி பிளஸ்2 மாணவர் பலி

மணப்பாறை, மார்ச் 21:  துவரங்குறிச்சி அருகே பைக் மீது கார் மோதி பிளஸ்2 மாணவர் பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜபெருமாள் மகன் கோகுலவாசன் (17). தற்போது பிளஸ்2 தேர்வு எழுதியிருந்தார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த கோகுலவாசன், நேற்று மாலை தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் கோகுலவாசனின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுலவாசன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோகுலவாசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் சென்னை மாம்பலம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்தனர்.

Tags : downtown ,
× RELATED கூடலூரில் காட்டுயானை காரை...