×

தளுதாளப்பட்டி, திருவெறும்பூரில் கல்விசீர் வழங்கும் விழா

மண்ணச்சநல்லூர், மார்ச் 21:  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் கல்வி சீர் வரிசை பொருட்கள் வழங்கினர். கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பள்ளிக்கு தேவையான எழுதுபொருட்கள், நாற்காலி, பீரோ, பாத்திரங்கள், தேச தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளியில் வழங்கினர். தலைமை ஆசிரியை ரோசரி விக்டோரியா மற்றும் உதவி ஆசிரியைகள் பொதுமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் சார்பில் ஸ்மார்ட் போர்டுக்கான ப்ரொக்ஜட்டர், புத்தகம், டிக்ஸ்னரி, பேனா, பென்சில், சில்வர்குடம், தட்டு, வாளி உள்ளிட்ட கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது. கல்விசீர் பொருட்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

Tags : Tutuvalapatti ,Tiruvarambur ,
× RELATED திருவெறும்பூர் பகுதியில் வாகன தணிக்கை ரூ.1.46 லட்சம் அபராதம் வசூல்