×

குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் மகாமக குளத்தில் இன்று தீர்த்தவாரி

கும்பகோணம், மார்ச் 21: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் பங்குனி உத்திர விழா தேரோட்டம் நேற்று நடந்தது. மகாமக குளத்தில் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி ஓலை சப்பரம், 18ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் நாகேஸ்வரசுவாமி, பிரகன்நாயகி அம்பாளுடன் காட்சி தந்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இன்று பங்குனி உத்திர திருவிழாவன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.  இதேபோல் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

Tags : Thamizhvari Temple ,Kodan Nageswaran Temple ,
× RELATED கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள்...