×

நாடாளுமன்ற தேர்தல் நாளன்று வாக்களிக்க மக்களை வலியுறுத்துங்கள் மாணவர்களுக்கு அறிவுரை

பேராவூரணி, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தல் நாளான்று அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்த வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கஜானாதேவி தலைமை வகித்தார். தாசில்தார் ஜெயலட்சுமி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோர் தேர்தல் நடைமுறை குறித்து பேசினர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித்துணை ஆட்சியருமான கமலக்கண்ணன் பேசுகையில், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், 100 சதவீத வாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்றார். மேலும் தேர்தல் முறைகேடு தொடர்பாக 1950 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம் என்றார். கூட்டத்தில் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா