×

புதுக்கோட்டையில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு

புதுக்கோட்டை, மார்ச் 21: புதுக்கோட்டையில் நடந்த சென்ற ஆசிரியையிடம் செயினை பரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடு வருகின்றனர். புதுக்கோட்டை நியூ டைமண்டு நகரை சேர்ந்த சங்கர் இவரது மனைவி சரஸ்வதி (38). திருமயம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது டிவிஎஸ் அருகே பைக்கில் வந்த  2 மர்ம நபர்கள் சரஸ்வதியை வழி மறித்து கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்தனர்.

ஆனால் சரஸ்வதி சுதாரித்து கொண்டு இருக பிடித்து கொண்டார். இதனால் செயின் அறுந்து பாதி செயின் தன் கையில் இருந்த நிலையில் சரஸ்வதி கூச்சலிட்டார். அதை தொடர்ந்து மீதி செயினை அறுத்துக் கொண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்து தப்பி சென்றவர்களை தேடிவருகின்றனர்.

Tags : teacher ,Pudukottai ,
× RELATED பீகாரில் ஜூன் 26, 28-ல் ஆசிரியர் தேர்வு...