வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையில் 2 சிறுமிகள் மாயம் : போலீசார் தீவிர விசாரணை

பெரம்பூர்: சென்னை புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையில் ஒரே நேரத்தில் 2 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புது வண்ணாரப்பேட்டை, இருசப்ப மேஸ்திரி முதல் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி வேளாங்கண்ணி (42). தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் 17 வயதாகும் இளைய மகள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இறுதி தேர்வு எழுதுவதற்காக மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றாள். அதன் பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவிக்கும், அதே பகுதியில் தேசிய நகரை சேர்ந்த அஜித் என்ற வாலிபருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் தனது பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி அஜித் கடத்தி சென்றுவிட்டதாக நேற்று முன்தினம் மாணவியின் தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர். அதேபோல் கொருக்குபேட்டை கோபால்ரெட்டி நகரை சேர்ந்தவர் சரவணன் (42). இவரது மனைவி லாவண்யா (38). இவர்களது, 17 வயது மகள் 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த தாய் பீரோவை திறந்து பார்த்தபோது நகை மற்றும் 1.15 லட்சம் பணம் மாயமாகியிருந்தது. ஆர்கே.நகர் போலீசில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : investigations ,
× RELATED ஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு