×

குட்கா கடத்திய 2 பேர் கைது

பெரம்பூர்: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்குரிய நபரின் பைக்கை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த பிரகாஷ் (34) என்பதும், 10 ஆயிரம் மதிப்பில் குட்கா கடத்தியதும் தெரிந்தது. எனவே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பிரகாஷை பிடித்து விசாரிக்கின்றனர்.

இதேபோல் மீஞ்சூர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த மீரான் மைதீன் (34) என்பவரின் பைக்கை போலீசார் மடக்கி விசாரித்தபோது 2 ஆயிரம் மதிப்பில் குட்கா கடத்தியது தெரிந்தது. அவரிடம் இருந்து குட்கா மற்றும் 86 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Gudka ,
× RELATED புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5...