×

பெரம்பலூர் மதன கோபாலசுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர்,மார்ச் 21: பெரம்பலூர்  மதனகோபால சுவாமி  கோயில் பங்குனி உத்திரப் பெருந்திரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.  பெரம்பலூர் மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழா  நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 11ம்தேதி அங்குரார்ப்பணம் நடந்தது. 12ம்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 13ம்தேதி சிம்ம வாகனத் தில், 14ம்தேதி அனுமந்த வாகனத்தில், 15ம்தேதி ஷேச வாகனத்தில், 16ம்தேதி வெள்ளிகருட வாகனத்தில், நேற்று 17ம்தேதி யானை வாகனத்தில் இரவு உற்சவம் நடந்தது. 18ம்தேதி புஷ்ப பல்லக்கும், திருக்கல்யாண வைபவமும் நடை பெற்றது. 19ம்தேதி குதிரை வாகனத்தில் திருவீதியுலா நடந்தது.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (20ம்தேதி) தேரோட் டம் நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொட ர்ந்து கோயில் செயல்அலுவலர் மணி முக்கியப்பிரமுகர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.தேர் நக ரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத் தில் பெரம்பலூர்,துறைமங்கலம், அரணாரை பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur Madana Gopalaswamy ,devotees ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்