பத்தாம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு கடினம்

கோவை, மார்ச் 21:  பத்தாம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 42,665 பேர் எழுத இருந்தனர். இதில், 41,270 பேர் தேர்வு எழுதினர். 1395 பேர் தேர்வு எழுதவில்லை. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடந்தது. இதில், செக்ஷன் ஏ, பி, சி, டி ஆகியவற்றில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 50  கேட்கப்பட்டது. இந்த வினாக்கள் கடினமாக இருந்தது. புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்டுள்ளனர். இதனால், சென்டம் எடுக்க முடியாது. 80 மதிப்பெண் வரை எடுக்க முடியும். தேர்வு கடினமாக இருந்தது, என்றனர்.

Related Stories:

>