×

தாரமங்கலத்தில் வாகன சோதனையில் ₹1.66 லட்சம் பறிமுதல்

தாரமங்கலம், மார்ச் 21: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கே.ஆர் தோப்பூர் பவர் கேட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிசந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த காரினை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி ₹1.8 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், அவர் பெயர் சிவராஜ் என்பதும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் உறவினர் திருமணத்திற்கு சீர் செய்ய பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து சேலம் துணை தாசில்தார் தரனிடம் பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர். ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரங்கராஜன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராசிபுரம் சாலையிலிருந்து ஆத்தூர் நோக்கி வந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் வந்த நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் எலக்ட்ரீசியனாக பணியாற்றும் ரவி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹58 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அதிகாரி அபுல்காசிமிடம் ஒப்படைத்தனர்.

Tags : Tharamangalam ,
× RELATED நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி...