×

பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு கடினம்

நாமக்கல், மார்ச் 21:எஸ்எஸ்எல்சி ஆங்கில தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வில் 24 ஒரு மதிப்பெண் கேள்விகளில், 9 கேள்விகள் மாணவர்களை குழப்பும் வகையில் புதிதாக கேட்கப்பட்டிருந்தது. டைரி என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான அமெரிக்கன் இங்கிலீஷ் வார்த்தை என்ன? என்று ஒரு கேள்வியும் ஓஎன்ஜிசி என்பதன் விரிவாக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விகளை இதற்கு முன்பு மாணவர்கள் சந்திக்கவில்லை. எனவே, ஆங்கில தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியர்கள் கூறுகையில், ‘வழக்கமாக அரசு பொதுத் தேர்வுகளில் முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 மதிப்பெண் அளவுக்கு அதே கேள்விகள் திரும்ப கேட்கப்படும். நடப்பாண்டு பெரும்பாலான கேள்விகள் இதற்கு முந்தைய பொதுத்தேர்வில் கேட்கப்படாத கேள்விகள் ஆகும். 24 ஒரு மதிப்பெண் கேள்விகளும் மாணவர்கள் யோசித்து பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு கடினமாக அமைந்திருந்தது,’ என்றனர். பிளஸ்1 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வு எளிமையாக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். இது குறித்து முதுகலை வேதியியல் ஆசிரியர்கள் கூறுகையில், ‘2 மதிப்பெண் பகுதியில் ஒரே மாதிரி விடை வரும் வகையில், 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் புத்தகத்தின் பின் பகுதியில் இடம்பெற்றுள்ள 8 கேள்விகள் வந்துள்ளது. பெரும்பாலான கேள்விகள் அனைத்து மாணவர்களும் எழுதும் வகையில் எளிமையாக இருந்தது,’ என்றனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்