×

ஊத்தங்கரை அருகே ஓய்வு பெற்ற தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் ₹1.16 லட்சம் பறிமுதல்


ஊத்தங்கரை, மார்ச் 21:  ஊத்தங்கரை அருகே, தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், ஓய்வுபெற்ற தொழிலாளர் நலத்துறை அலுவலர், ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ₹1.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு ரோட்டில், தேர்தல்  பறக்கும் படை அலுவலர் அசோகன் தலைமையிலான அலுவலர்கள், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் ₹1.16 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோகன் விசாரணை மேற்கொண்டார். அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வுபெற்ற  தொழிலாளர் நலத்துறை அலுவலர் முனுசாமி(59) என்பதும், அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ₹1.16 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

தேர்தல் தொடர்பான புகார்களை “சிவிஜில்” ஆப் மூலம் தெரிவிக்கலாம்கிருஷ்ணகிரி, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை “சிவிஜில்” என்ற ஆப் முலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என  கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை “சிவிஜில்” என்ற ஆப் மூலம், சம்மந்தப்பட்ட  தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் இந்த ஆப் வாயிலாக  தெரிவிக்கலாம். இந்த புகார்களின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : employee officer ,Uthangarai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது