×

காரிமங்கலத்தில் பேரிகார்டுகள் மாயம்

காரிமங்கலம், மார்ச் 21: தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், சாலைப் பிரிவுகளில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டது.  குறிப்பாக மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில், மேம்பாலம் இல்லாத காரணத்தினால் விபத்து நடக்கும் பகுதிகளாக மாறி விட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல், தற்போது வரை நிகழ்ந்த விபத்துகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கை-கால்களை இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல், மாட்லாம்பட்டி குப்பாங்கரை பிரிவு சாலை மற்றும் பைசுஅள்ளி பிரிவு சாலை ஆகிய பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து விபத்துக்களை தவிர்க்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. ஆனால், அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே பேரிகார்டுகள் அகற்றப்பட்டன. சாலையோரம் தூக்கி எறியப்பட்ட பேரிகார்டுகள் தற்போது மாயமாகி விட்டது. எனவே, மீண்டும் பேரி கார்டுகளை வைத்து, சாலையில் மிளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sky ,
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு