×

நெல்லையில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

நெல்லை, மார்ச் 21:  நெல்லையில் அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். நெல்லை நாடாளுமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச். மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் கார் மூலம் நெல்லை வந்த அவருக்கு பாளை பெல் பள்ளி அருகில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி. ஆகியோர்  தலைமையில் அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலையில்  கட்சியினர் திரண்டு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் மனோஜ்பாண்டியன், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், முத்துராமலிங்கதேவர், பாரதியார் சிலை மற்றும் பாளை பகுதியில் பெரியார், வஉசி, அழகுமுத்துகோன், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், வசந்திமுருகேசன், மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், மாவட்ட  அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெ.பேரவை செயலாளர் ஜெரால்ட், இளைஞரணி செயலாளர் ஹரிகரசிவசங்கர், முன்னாள் எம்.எல்ஏக்கள் தர்மலிங்கம்,  சுப்பையா பாண்டியன், சக்திவேல்
முருகன், புறநகர் மாவட்ட சிறுபான்மைபிரிவு  செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், இளமதி, பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னுச்சாமி, கந்தசாமிபாண்டியன், பகவதிமுருகன், வேல்பாண்டி,  இபிகருப்பசாமி மற்றும் இட்டமொழி டென்சிங, மாணவரணி செயலாளர் சிவந்தி மகாராஜன், மகளிரணி செயலாளர் சொர்ணா, மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், டால் சரவணன், பகுதி செயலாளர்கள்  வக்கீல் ஜெனி, ஹயாத், மோகன் மற்றும் திருத்து சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் சண்முகையா, சங்கரன்கோவில் கண்ணன், விவசாய அணி பரமகுருநாதன், முன்னாள் மாவட்ட  செயலாளர் செந்தில்ஆறுமுகம், பாளை பகுதி முன்னாள் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வக்கீல்கள் ஜோதிமுருகன், பீர்மைதீன், வெயிலுமுத்து, செல்வகணபதி, பொதுக்குழு உறுப்பினர்கள்
பேபி சுந்தர், படப்–்பை சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் வண்ணை கணேசன், மணிமாளிகை கணேஷ் மற்றும் காந்தி வெங்கடாச்சலம், ஈஸ்வர கணபதி, புலவர் சாகுல்அமீது, செய்யதலி, அமுஸ் முருகன், வாஸ்து தளவாய், காந்திமதிநாதன், கபாலி, நத்தம் வெள்ளப்பாண்டியன், நெடுஞ்செழியன், தச்சை மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிமுக வேட்பாளர் காரில் சோதனை
அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கட்சியினருடன் காரில் நெல்லை வந்தார். பாளை கேடிசி நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர் வந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாகவே பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை காரில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் திருப்பி ஒப்படைத்தனர். தொடர்ந்து வேட்பாளருடன் வந்த விஐபி கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பணம் ஏதும் சிக்கவில்லை.

2 வேட்பாளர், 2 படங்கள்
அதிமுக  வேட்பாளர் மனோஜ்பாண்டியன், நெல்லை கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்திற்கு மரியாதை  செலுத்தினர். இதேபோல் நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் ஞானஅருள்மணி மற்றும்  கட்சியினர் அதிமுகவினர் வைத்த ஜெ.படம் அருகில் மற்றொரு ஜெயலலிதா உருவபடத்தை  வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : candidate ,AIADMK ,Paddy ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...