×

கடலூரில் திமுக வேட்பாளர் அறிமுகம்

கடலூர், மார்ச் 21: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ் அறிமுக கூட்டம் கடலூர் நகர திமுக அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். வேட்பாளரை மாநில தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி அறிமுகம் செய்து வைத்தார். அவரை வெற்றி பெற வைத்து கடலூர் எம்பியாக திமுக தலைவரிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, நகர அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மற்றும் கடலூர் நகர திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
சாலை பணி முடிக்காததால் பொதுமக்கள் கடும் அவதி நெய்வேலி, மார்ச் 21: நெய்வேலி வடக்குத்து ஊராட்சி சக்தி நகர் விரிவாக்கத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம சாலை வழியாக வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, வொங்கடாம்பேட்டை, அன்னதானம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குறுக்கு வழியாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. இதனால் இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தார்சாலை பணி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் நடந்தது. இதற்காக முன்பு இருந்த சாலையை கொத்தி அகற்றினர். கடந்த இரண்டு மாதங்களாக ஜல்லிகள் கொட்டப்பட்டது. அதன் பின்னர்  சாலை பணிகள் நடக்கவில்லை.இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி வாகனங்கள் வருவதில்லை. மாணவர்கள் பல மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி பேருந்தில் ஏறி சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலை பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Introduction ,candidate ,DMK ,Cuddalore ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...