×

தரமின்றி அமைக்கப்படும் தார் சாலை

பண்ருட்டி, மார்ச் 21: பண்ருட்டி அருகே நடுகுப்பம்- வல்லம் செல்லும் சாலை கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இச்சாலை வழியாக மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டனர். இதனை கண்டித்து போராட்டம் அறிவித்ததின் எதிரொலியாக டெண்டர் விடப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின்னர் சாலை போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் கூறினர். ஆனால் எஸ்டிமேட்டில் உள்ளபடிதான் பணிகள் நடைபெறுகின்றன என ஒப்பந்ததாரர் கூறியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் சாலையில் கால் இஞ்ச் கூட தார் ஜல்லி கலவை சரியாக போடவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே தரமான சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இரு கிராம மக்களும் வைத்துள்ளனர்.

Tags : Dar Road ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...