×

தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்ப்போர் மீது நடவடிக்கை கோவை கலெக்டர் உத்தரவு

கோவை, மார்ச் 20: தடைசெய்யபட்ட மீன் இனங்களை வளர்ப்போர் மற்றும் உற்பத்தி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.கோவை கலெக்டர் ராசாமணி கூறியுள்ளதாவது: தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடைசெய்யபட்டுள்ள வெளிநாட்டு கெளுத்தி மீன் இனங்களை (கிளாரியஸ் கரிபீனியஸ், தாய் கேட்பிஸ்) உற்பத்தி செய்வதும், வளர்த்தெடுப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி தடைசெய்யபட்ட கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன்வளர்ப்பு குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அகற்றப்படும். மேலும் மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை, கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்த்து பயனடையலாம். இதுகுறித்த தகவல் வேண்டுவோர் மீன்வள உதவி இயக்குநர், 4,எஸ்.வி.காம்ப்ளெக்ஸ் 2ம் தளம், வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு ,திண்டல், ஈரோடு என்ற முகவரியிலும், ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர்:8903782773,  கோவை மீன்வளத்துறை ஆய்வாளர்: 9655506422,9384824369 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
இவ்வாறு ராசாமணி கூறியுள்ளார்.



Tags : Coimbatore Collector ,
× RELATED கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டம்