×

பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, மார்ச் 20:  பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து கோவையில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
கோவை  கோர்ட் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை பெண் வக்கீல் சங்கத்தின்  மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.
செயலாளர் கார்த்திகா முன்னிலை  வகித்தார். இதில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்ற  நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், உண்மை குற்றவாளிகளை  கைது செய்ய வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி அமைச்சகம் அமைக்க  வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதுடன், நீதிமன்ற  உத்தரவை மதிக்காமல் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் பெயரை  உள்நோக்கத்துடன் திட்டமிட்டு கூறிய மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம்  செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடந்தது. இதில் கோவை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் 2ம் நாளாககோர்ட் புறக்கணிப்பு : பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பொள்ளாச்சி மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்தும், வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.  இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை கோர்ட்டில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் 2,500க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக நேற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முதல் வழக்கம் போல் பணியாற்ற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


Tags : prosecutors ,
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்