×

மண்ணச்சநல்லூர் அருகே 16 பேரை கடித்த வெறிநாய் குழாய்களுக்கிடையே சிக்கி சாவு

மண்ணச்சநல்லூர், மார்ச் 20:  மண்ணச்சநல்லூர் அருகே 16 பேரை கடித்த வெறிநாய் பொதுமக்கள் அடித்து துரத்தியபோது குடிநீர் குழாய்களுக்கு இடையே தலை சிக்கி துடிதுடித்து பலியானது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தில் நேற்று வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்களை பார்த்து குறைத்த வெறிநாய் திடீரென்று அவர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 16 பேரை துரத்தி வெறிநாய் கடித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அந்த நாயை கல்லால் அடித்து துரத்தினர். அப்போது பொதுமக்களிடம் இருந்து தப்பித்த வெறிநாய் பெருவளைவாய்க்கால் பகுதியில் ஓடியது. அப்ேபாது வாய்க்காலில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு இடையே ஓடியபோது எதிர்பாராமல் நாயின் தலை இரண்டு குடிநீர் குழாய்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அப்போது பொதுமக்களும் துரத்திக்கொண்டு ஓடியதால் தப்பிக்க முயன்று துடிதுடித்த நாய் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. வெறிநாய் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Mannachanallur ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அரசு வழங்கிய...