×

மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோயிலில் இன்று தெப்போற்சவம்: நாளை தீர்த்தவாரி

திருச்சி, மார்ச் 20:  மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோயிலில் இன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி மலைக்கோட் டை தாயுமானவர்சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தெப்பத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சுவாமி கேடயம், காமதேனு, கமலம், அன்னம், ரிஷபம், பல்லக்கு, சிம்மம், பல்லக்கு ஆகிய வாகனங்களில் நேற்று வரை பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று மாலை நடக்கிறது. தொடர்ந்து  பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மேல் சுவாமி பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் கண்டருள புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி தெப்பத்தை 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். சுவாமி, அம்பாள் தெப்பம் கண்டருளிய பின்னர் கோயிலுக்கு செல்கின்றனர். உற்சவத்தின் நிறைவு நாளான நாளை (21ம் தேதி) காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சண்டிகேஸ்வரர் புறப்பாடும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் விஜயராணி உள்பட கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பனை ஓலைகளால் வடிவமைப்பு இந்த வருடம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் பனை ஓலைகளால் தெப்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் மற்றும் பிளக்ஸ் மூலம் தெப்பம் வடிவமைக்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆண்டு முன்னர் வடிவமைத்த அதே நிலையில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு முழுவதுமாக பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டு வருகிறது.

Tags : Temple ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...