×

பொதுமக்களின் ஓட்டு யாருக்கு? தொகுதி வாரியாக மத்திய உளவுத்துறை ஆய்வு

பெரம்பலுார், மார்ச் 20: தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டி வருவது போல் மத்திய உளவுத்துறை தொகுதி வாரியாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 17வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங் களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்பரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தொகுதிபங்கிடு முடிந்து முறையான அறிவிப்புகளை வெளியிட்டு வேட்பாளர் தேர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதபோல் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று களப்பணியில் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய உளவுத்துறை (ஐபி) அனைத்து தொகுதிகளில் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக தொகுதியில் அரசியல் கட்சிகள் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வுகளை இன்னும் சில நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Central ,
× RELATED கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர்...