புனித சூசையப்பர் தேவாலயத்தில் யோசேப்பு திருவுருவ சொரூபம் குடந்தை பிஷப் திறந்து வைத்தார்

பெரம்பலூர்,மார்ச்20: பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் உறங்கும் புனித யோசேப்பு திருவுருவச் சொரூபத்தை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கும்பகோணம் மறைமாவட்டத்திலேயே முதல் முறையாக கிபி 1861ம்ஆண்டு  ஆங்கிலேய பாதிரியார்களால் புனித சூசையப்பர் தேவால யம் நிறுவப்பட்டது. 158ஆண்டு களைக் கடந்துவிட்ட இந்த தேவாலயத்தின் பெயரை தற்போது புனித யோசேப்பு தேவாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யும் விழா, தேவா லயத்திற்குள் உறங்கும் நிலையிலுள்ள புனித யோசேப்பு திருவுருவச் சொரூபம் திறப்புவிழா நேற்று நடந்தது.

இதனையொட்டி நேற்றுமாலை  தேவா லய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாளையம் பங்கு குரு ஜான்கென்னடி வரவேற்றார். பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம், கோனான்குப்பம் வட்டார முதன்மை பங்கு குரு அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி கலந்துகொண்டு, உறங்கும் நிலையிலுள்ள புனித யோசேப்பு திருவுருவச் சொரூபத்தைத் திறந்து வைத்துப் புனிதப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து பிஷப் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குகுருக்கள் சென்னை ஆன ந்த், பெருமாள் பாளையம் ஆரோக்கிய ராஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பங்கு குருக்கள் கலந்து கொண்டனர். அருட்ச கோதரிகள், அன்பியம் குழுவினர், புனித சூசையப்பர் பங்கு கோவில் கத்தோலி க்கக் கிறிஸ்தவர்கள், ரெங்கநாதபுரம், குரும்பலூர், பெரம்பலூர், புதுநடுவலூர், சத்திரமனை உள்ளிட்டப் பல்வேறு கிராம ங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் நூற்று க் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: