×

குறைதீர் கூட்டம்

சென்னை: தலைமை அஞ்சலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.சென்னை அண்ணா சாலையில் தலைமை அஞ்சலகம் உள்ளது. இங்கு மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்று வருவோர், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நேரிலோ, தபால்  வாயிலாகவோ, மின் அஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) மூலமாக வரும் 25ம் தேதிக்கு முன்னதாக தலைமை அஞ்சலக அதிகாரிக்கு ‘குறைதீர்வு முகாம்’ என்ற தலைப்பில் அனுப்பி வைக்க  வேண்டும். மேலும் 28ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கும் பயனாளிகள் குறை தீர்வு முகாமில் நேரில் வந்தும் கலந்துகொள்ளலாம்.



Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...