திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐ மொபட்டை திருடிய சக எஸ்ஐ: சிசிடிவி பதிவில் சிக்கினார்

சென்னை: காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ெபண் எஸ்ஐ ஒருவரின் மொபட்டை உடன் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் திருடிய சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவல்லிக்கேணியில் மாதா பெயர் கொண்ட பெண் எஸ்ஐ ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி 25ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மொபட்டை எடுக்க  வந்தபோது, அது மாயமாகி இருந்தது.  இதுகுறித்து இன்ஸ்ெபக்டரிடம் பெண் எஸ்ஐ புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அனைத்து போலீசாரையும் நேரில் அழைத்து விசாரித்தார். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இன்ஸ்பெக்டர்  காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்தார்.

அப்போது, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் பணியாற்றும் அரசர் பெயர் கொண்ட உதவி ஆய்வாளர் கடந்த 25ம் தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் பெண் உதவி ஆய்வாளர் மொபட்டை காவல் நிலையத்தில்  இருந்து திருடி சென்ற காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் மொபட்டை திருடிய உதவி ஆய்வாளரை நேரில் அழைத்து கடுமையாக திட்டி மொபட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி  உதவி ஆய்வாளர் திருடிய மொபட்டை கொண்டு வந்து இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


× RELATED சென்னையில் ஒரே நாளில் நடந்த 9 செயின்...