×

ஊட்டி ேலாயர் பஜார் சாலையில் வர்ணம் பூசப்படாத வேக தடையால் விபத்து

 ஊட்டி, மார்ச் 19: நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க கூடாது என்ற உத்தரவு உள்ள போதிலும், ஊட்டி டவுன் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் வேகதடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வர்ணம் பூசாததால் விபத்து ஏற்படுகிறது.   தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத் தடைகள் அமைக்க கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதற்கு மாறாக பேரிகார்டு அல்லது சிக்னல் அமைத்து கொள்ளலாம். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த உத்தரவு காற்றில் பறக்கிறது. பெரும்பாலான இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் வேக தடைகளை அமைத்துள்ளனர். இந்த வேக தடைகளுக்கு வர்ணம் பூசப்படாத நிலையில், சாலைகளில் விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.    கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டியில் சேரிங்கிராஸ் முதல் மத்திய பஸ் நிலையம் வரை சாலை சீரமைக்கப்பட்டது.

அப்போது, டவுன் பஸ் ஸ்டேண்ட் அருகே இரு வேக தடைகள் அமைக்கப்பட்டது. அேதபோல், மார்க்கெட் எதிரே மூன்று சிறிய வேக தடைகள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளில் வேக தடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி இச்சாலையில் வேக தடை அமைக்கப்பட்ட போதிலும், சாலை அமைத்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை இந்த வேக தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை. ஒளிரும் விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் வேக தடைகள் மீது ஏறும் போது, விபத்து ஏற்படுகிறது.  எனவே லோயர் பஜார் சாலையில் டவுன் பஸ் ஸ்டேண்ட் அருகே அமைக்கப்பட்டுள்ள வேக தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : accident ,Ooty Jayalayar Bazaar Road ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...