×

கோடை சீசனை முன்னிட்டு தொட்டபெட்டா சாலையில் பஸ்கள் இயக்க திட்டம்

ஊட்டி, மார்ச் 19:ஊட்டியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா மலைசிகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.   இதில் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிகரம் வரை சுமாா் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. தொட்டபெட்டா பகுதி நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது. தொட்டபெட்டா சிகரத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கோடை சீசன் சமயங்களில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1500 வாகனங்கள் தொட்டபெட்டாவிற்கு சென்று வருகின்றன. சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்கள் சென்று வர இடவசதியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சீசன் சமயங்களில் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாகிறது.
  இதையடுத்து சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கிலும், தொட்டபெட்டா சிகரத்திற்கு வாகனங்கள் சென்று வருவதை குறைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது.

இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சமயங்களில் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிகரம் வரை வனத்துறை சார்பில் 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படும். கோடைசீசன் அடுத்த மாதம் முதல் துவங்க உள்ள நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   அப்போது தொட்டபெட்டா சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து தொட்டபெட்டா சிகரம் வரை வனத்துறை சார்பில் 4 பஸ்கள் இயக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

Tags : road ,Dodabetta ,summer season ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி