×

பாரம்பரிய பூஜையுடன் விதைப்பு திருவிழா துவங்கியது

ஊட்டி, மார்ச் 19:  ஊட்டி அருகேயுள்ள அப்புக்கோடு கிராமத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான விதைப்பு திருவிழா நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இவர்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை என நான்கு சீமைகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் மார்ச் மாதம் இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா சில கிராமங்களில் நடத்தப்படுகிறது.  மேற்குநாடு சீமைக்குட்பட்ட 33 கிராமங்களை சேர்ந்த படுகரின மக்கள் ஊட்டி அருகேயுள்ள அப்புகோடு கிராமத்தில் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் அங்குள்ள கோயிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை வைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து, பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு கார்போகத்திற்கு விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும். மழை பெய்ய வேண்டும் என பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமனவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : sowing festival ,pooja ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை