×
Saravana Stores

மணப்பாறையில் வெயில் தாக்கத்தால் மரத்திலிருந்து மயங்கி விழுந்த குரங்குகுட்டி

மணப்பாறை, மார்ச் 19: மணப்பாறை அடுத்த வடுகப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் குரங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. இந்த குரங்குகளுக்கு வனப்பகுதியில் கோடைகாலத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் தண்ணீருக்காக தேடி அலையும் குரங்குகள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இவை  இடையூராகவும் உள்ளது. இந்நிலையில் நேற்று வடுகப்பட்டி அருகே மரங்களில் இருந்த குரங்கு கூட்டத்தில் இருந்து 6 மாத குரங்குகுட்டி ஒன்று வெயில் தாக்கத்தில் மரத்திலிருந்து மயங்கி சாலையில் விழுந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரங்குகுட்டியை காப்பாற்றி அதற்கு தண்ணீர் மற்றும் சாத்துக்குடி பழச்சாறுகள் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குரங்குகுட்டியை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்ற வனத்துறையினர் அங்கு பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

Tags : wedding ,
× RELATED 2026 தேர்தல் மட்டுமல்ல அதற்கு பிறகு...