×

காவல்துறை எச்சரிக்கை

ஜெயங்கொண்டம், மார்ச் 19: தேர்தல் நடத்தை விதிமுறை மீறும் ஜெயங்கொண்டம் பகுதி திருமண மண்டப உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் திருமண மண்டபம்,  பிளக்ஸ், பிரிண்டிங் பிரஸ், லாட்ஜ், மீட்டிங் ஹால் உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்  நடந்தது. ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். அப்போது டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், பிளக்ஸ் பிரிண்டிங் அடிப்பதற்கான அனுமதியை பெற வேண்டும். பிளக்ஸ் பிரிண்டிங் செய்யும்போது அதில் அனுமதி பெற்ற எண், பிரிண்டிங் அச்சக பெயர், எண்ணிக்கை உள்ளிட்டவை பிரிண்டிங் செய்ய வேண்டும். திருமண மண்டபம், மீட்டிங் ஹால் உரிமையாளர்கள், அரசியல் கட்சி கூட்டங்களை உரிய அனுமதி பெற்றபின் நடத்த அனுமதிக்க வேண்டும்.

எந்த கட்சியினர் கூட்டங்கள் நடத்தினாலும் காவல் நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை வழி டத்த வேண்டும். தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேரம் முன்பு மண்டபம், லாட்ஜ் ஆகியவற்றில் வெளியூர் நபர்கள் தங்கியிருந்தால் உடனே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் பிளக்ஸ் அச்சகங்கள், பிரஸ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், லாட்ஜ், மீட்டிங் ஹால் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...