வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினர் பாகுபாடின்றி சோதனையிட வேண்டும் டிஆர்ஓ அறிவுறுத்தல்

பெரம்பலூர்,மார்ச்19: வாகனத் தணி க்கையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் எவ்வித பாகுபா டும் இன்றி அனைத்து வாக னங்களையும் சோதனையிட வேண்டும். பெரம்பலூரில் தேர்தல் தொடர்பான  நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் அழகிரிசாமி  அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற வுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர்  கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமை வகி த்தார். கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தொட ர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறி த்தும், 100சதவீதம் நேர்மையான வாக்கு ப்பதிவினை நடத்த மேற்கொள்ளப் பட்டு ள்ள நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் விபர த்தையும், தேர்தல் நடத்தை விதிகள் குறி த்தும், விதிமீறல்கள் கண்டறியப் பட்டால் எந்த சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்தும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறை அலுவலர்க ளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

  மேலும், காவல்துறை அலுவ லர்கள் அனைவரும் தேர்தல் பணி சீட்டினை தவறாமல் பெற்றுக்கொண்டு, தேர்தல்நாளன்று தவறாமல் வாக்களிக்க வும், அதற்காக மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. இறுதி யாகத் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் புதியைதாக பயன்படுத்தவுள்ள வாக்குப் பதிவு சரிபார்க்கும் இயந்திரம் குறித்தும் செய்முறைப் பயிற்சி அனைத்து வகை காவல்துறை அலுவலர்களுக்கும் வழங்கப் பட்டது.  மேலும் நடைபெற வுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்த லில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும். தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வேட்பாளர் யாரேனும் தேர்தல் விதிகளை மீறுகிறா ர்களா எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் எவ்வித பாகுபா டும் இன்றி அனைத்து வாகனங்களை யும் சோதனையிட வேண்டும்  என்றார்.கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஏடிஎஸ்பி ரங்கராஜன் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>