×

ராம்கோ கல்லூரி ஆண்டு விழா

ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப்    டெக்னாலஜியின் 6வது ஆண்டு விழா நடைபெற்றது. ராம்கோ குழும சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார். கல்லூரி துணைமுதல்வர் ராஜகருணாகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் என்.ஜவஹர் வாசித்தார். சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் இயக்குனர் முனைவர் வி.கோவைச்செல்வன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘மாணவர்கள் தங்களின் தனித்திறமை, அறிவாற்றலை வேலைவாய்ப்புக்கு பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானம், ஆராய்ச்சி, விளையாட்டு துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும். உடல்நலத்திற்காக யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேற்படிப்புக்காக கேட், நீட், டான்செட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார். பின்னர், ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளுடன், கல்வி உதவித்தொகை, திறமையான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணைப் பொதுமேலாளர் செல்வராஜ், பேராசிரியர்கள் செய்திருந்தனர். 2014-18ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த மாணவராக பிரேம்குமார் தேர்ந்தெடுக்கப்பெற்று, அவர் கவரவிக்கப்பட்டார். மாணவி எம்.ஹர்ஷினி நன்றி தெரிவித்தார்.

Tags : Ramco College Anniversary ,
× RELATED பணம் திருடியவர் கைது