×

காரியாபட்டி 1வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி ஒரு கி.மீ சென்று தண்ணீர் பிடிக்கும் அவலம்

காரியாபட்டி, மார்ச் 19: காரியாபட்டி பேரூராட்சி 1வது வார்டில் நெடுங்குளம் பகுதி உள்ளது. நகரில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, சாலையோரங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ்நிலையம், முக்குரோடு, கள்ளிக்குடி சாலை, அருப்புக்கோடை மெயின் ரோடு, செவல்பட்டி, அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம் உட்பட நகரின் பல அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளன. ஒரு சில குடிநீர் தொட்டிகள் ஆரம்பம் முதலே செயல்படவில்லை. வெயில் காலம் தொடங்கிய நிலையில் நகரில் பொதுமக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனர்.
.இந்நிலையில், 1வது வார்டு நெடுங்குளம் பகுதியிலும், குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால், பொதுமக்கள் தள்ளுவண்டி, சைக்கிள், டூவீலர் மூலம் தண்ணீர் எடுக்க ஒரு கி.மீ தூரம் செல்கின்றனர். குடிநீர் வரும் இடங்களில் குடங்களுடன் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். எனவே, காரியாபட்டி 1வது வார்டு பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ward ,Kariapatti ,
× RELATED அடிப்படை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை