×

தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 5 மாதமாக ஊதியம் இல்லை

இளையான்குடி, மார்ச் 19:      இளையான்குடி ஒன்றியத்தில் மோடி அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம்(ஸ்வஜ் பாரத்) செயல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை ஏற்படுத்துவதற்காக, சேவை மனம் கொன்டவர்கள் துப்புரவு பணியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள்  தினந்தோறும்  வீதி வீதியாக, வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். அதனால் குப்பைகள் பரவிவருவதை  கட்டுப்படுத்த முடிந்தது. தள்ளு வண்டியில் கடும் மழை,  வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமங்களை அழகுபடுத்தும் இந்த துப்புரவு பணியாளர்களுக்கு  மாதம் ரூ.2600 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும்  கடந்த 5 மாதமாக (அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி)  இந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊழியர்கள் கூறுகையில், ‘‘வறுமைக்கோட்டுக்கு கீழே ஏழ்மை நிலையில் உள்ளவர்களே இந்த துப்புரவு பணியில் சேர்ந்து  சொற்ப ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் ஊதியத்தை  கடந்த ஐந்து மாதமாக  அதிகாரிகள் வழங்காமல் உள்ளனர். இதனால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தனர்.


Tags : Cleaning workers ,Clean India ,India ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...