×

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் அடிக்கடி கால்வாய் அடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

பரமக்குடி, மார்ச் 19: பரமக்குடி நகராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் வரத்து கால்வாய்களில் தேங் கிநிற்கும் கழிவுநீரால் பரமக்குடி நகராட்சி பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதை கண்டும், காணாமலும் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியாக பரமக்குடி நகராடசி உள்ளது. பரமக்குடி நகராட்சி மூலம் அமைக்கபடும் கழிவுநீர் வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தும், மண் மூடி வரத்து கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. குடியிருப்பு மற்றும் வியாபார பகுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மெல்ல மெல்ல மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு, முறையான பராமரிப்பின்மை போன்றவற்றால் கழிவுநீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய் விட்டன. நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில இடங்களிம் மட்டும் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் தூர்வாரிய மணல், குப்பைகள் உள்ளிட்டவை உரிய முறையில் உடனுக்குடன் அகற்றப்படவில்லை. இதனால் இவைகள் அனைத்தும் மீண்டும் வரத்து கால்வாய்க்குள்ளேயோ அடைத்து கொள்கிறது. அதனால் வரத்து கால்வாய்க்களில் கழிவுநீர் நாட்கணக்கில் தேங்கியுள்ளது. இதனால் பரமக்குடி குத்துக்கல் தெரு, ஆயிர வைசிய பள்ளி பகுதி உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வரத்து கால்வாய்க்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மக்களை கடித்து டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் போது அள்ளப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவைகளை உடன் லாரியில் ஏற்றி அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்கின்றனர். நகராட்சியின் அலட்சிய போக்கால், நாட்கணக்கில் காயும் குப்பைகள், காற்றில் பறந்து மீண்டும் கால்வாய்களில் விழுந்து அடப்பை உருவாக்குகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். கால்வாய்களில் உள்ள அடைப்பை சரி செய்து உடன் கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். கொசுக்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிப்பதோடு, குழந்தைகளை தொற்று நோய் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் என கூறினார்.

Tags : areas ,Paramakudi ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை