×

புதூர் பகுதியில் இன்று மின்தடை

மதுரை, மார்ச் 19: மதுரை நத்தம் ரோட்டில், தேசிய மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், கோ.புதூர் மின்வாரிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று (மார்ச் 19) காலை 9.30 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும்.மின்தடை பகுதிகள்: தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள் குடியிருப்பு, டீன் குடியிருப்புகள், பாண்டியன் ஹோட்டல் உயர் அழுத்த மின் இணைப்பு, புது நத்தம் ரோட்டில் பி.டி.ஆர். சிலையிலிருந்து பாரதி உலா ரோடு வரை மற்றும் டான் டீ பகுதி. இத்தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags : area ,Pudur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...