×

காங்கிரஸ் கூட்டம்

குஜிலியம்பாறை, மார்ச் 19: குஜிலியம்பாறையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை வகிக்க, நகர தலைவர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்தும், கரூர் பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முயற்சி செய்த இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்தும், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோமுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,meeting ,
× RELATED மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!