×

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

திண்டிவனம், மார்ச் 19: திண்டிவனத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.திண்டிவனம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ராகவன் மனைவி அலமேலு (60). இவர் நேற்று மாலை வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் சுற்று சுவருக்குள் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாகதவறி விழுந்தார். மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஜெயபாலன் தலைமையிலான வீரர்கள் உயிருக்கு போராடிய மூதாட்டியை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...