×

சூதாடிய 4 பேர் கைது

விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னக்கொசப்பள்ளம் அணைக்கட்டு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவபெருமாள் (38), முத்து (40), சக்திவேல் (44), சண்முகம் (56) ஆகிய 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த 500 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு